பாஜக நிர்வாகி  இரவில் நீக்கம் - அதிகாலையில் சேர்ப்பு.தொண்டர்கள் அதிர்ச்சி.. 

by Editor / 16-03-2023 08:01:36am
பாஜக நிர்வாகி  இரவில் நீக்கம் - அதிகாலையில் சேர்ப்பு.தொண்டர்கள் அதிர்ச்சி.. 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உருவப்படத்தை எரித்து பாஜகவை சேர்ந்த இளைஞரணி நிர்வாகிகள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அதிமுக - பாஜக இடையே பிரச்சினை ஏற்பட்டு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடும் எதிர்வினையாற்றினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதையடுத்து நேற்றிரவு எடப்பாடி பழனிச்சாமி உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக இளைஞரணி மாவட்ட தலைவர் தினேஷ் ரோடி என்பவர்  கட்சியில் இருந்து 6 மாத காலத்திற்கு நீக்கி வைக்கப்படுவதாக அக்கட்சியின் வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் நேற்றிரவு அறிக்கை மூலம் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் இன்று அதிகாலையில் தினேஷ் மீதான நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாகவும், அவர் அவருடைய பதவியில் தொடருவதாக பாஜக மாநில பொதுச் செயலாளர் பொன்.பாலகணபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இரவில் நீக்கம் செய்யபட்டு அதிகாலையில் அது ரத்து செய்யப்பட்ட சம்பவம் பாஜகவினர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது மட்டும் இல்லாமல் மேலிடத்தின் ஆதரவுடன் எடப்பாடி பழனிச்சாமி உருவப்படத்தை எரித்து உள்ளாரா..என்ற என்ற கேள்வி தற்போது தூத்துக்குடி வடக்கு  மாவட்டம் பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பாஜக நிர்வாகி  இரவில் நீக்கம் - அதிகாலையில் சேர்ப்பு.தொண்டர்கள் அதிர்ச்சி.. 
 

Tags : பாஜக நிர்வாகி  இரவில் நீக்கம் - அதிகாலையில் சேர்ப்பு.தொண்டர்கள் அதிர்ச்சி.. 

Share via