10-ம் வகுப்பு தனித்தேர்வு நுழைவுச் சீட்டு வெளியீடு.

by Editor / 16-03-2023 07:53:57am
10-ம் வகுப்பு தனித்தேர்வு நுழைவுச் சீட்டு வெளியீடு.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கான நுழைவுச் சீட்டு (ஹால் டிக்கெட்) வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் 17ஆம் தேதி முதல் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மார்ச் 20 முதல் மார்ச் 24ஆம் தேதி வரை செய்முறைத் தேர்வு நடைபெறவுள்ளது. ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 20 ஆம் தேதி வரை எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது.தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in  என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via