மலைப்பாம்புகளுடன் ஆட்டம் காட்டிய நபர்

by Staff / 16-03-2023 11:37:54am
மலைப்பாம்புகளுடன் ஆட்டம் காட்டிய நபர்

நடுத்தர வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இரண்டு பெரிய மலைப்பாம்புகளுடன் விளையாடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், அமெரிக்காவைச் சேர்ந்த ஜே ப்ரூவர் என்ற நபர் இரண்டு பெரிய வெள்ளை மற்றும் கருப்பு மலைப்பாம்புகளின் வால்களை பின்னால் இழுப்பதைக் காணலாம். அவர் ஒரு மிருகக்காட்சிசாலையின் அதிகாரி என்று கூறப்படும் நிலையில், மலைப்பாம்புகளுடன் எப்போதும் வேடிக்கையாக நேரத்தை செலவிடுவதாக கூறுகின்றனர். இருப்பினும், இந்த காட்சிகள் பயமாக இருப்பதாகவும், கவனமாக இருக்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

Tags :

Share via