சுற்றுலா பயணிகள் குறைவாக செல்லும் நாடு

by Staff / 16-03-2023 05:46:28pm
சுற்றுலா பயணிகள் குறைவாக செல்லும் நாடு

உலக நாடுகள் தங்கள் பொருளாதாரத்தின் ஒரு பங்கை அதிகரிக்க சுற்றுலா துறையை மேம்படுத்தி வருகிறது. இந்நிலையில், உலகிலேயே மிகவும் அழகான நாடுகளில் ஒன்றாக இருக்கும் துவாலு (Tuvalu) சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக இருப்பதால் சுற்றுலா துறையில் மிகவும் பின்தங்கிய நாடாக இருக்கிறது. துவாலு தீவு கூட்டம் தான் நிலப்பரப்பின் அடிப்படையில், உலகின் நான்காவது சிறிய இறையாண்மை கொண்ட நாடாக பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும், மேற்கு பசிபிக் கடலில் அமைந்துள்ள துவாலுவா தீவுக்கூட்டத்தில் உள்ள ஒன்பது தீவுகள் எனப்படும் nine islands தற்போது இயற்கை சீற்றம் காரணமாக அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

 

Tags :

Share via