திமுகவிற்கு சவால் விட்ட வானதி சீனிவாசன்

by Staff / 17-03-2023 05:28:58pm
திமுகவிற்கு சவால் விட்ட வானதி சீனிவாசன்

நாடாளுமன்ற ஜனநாயகம் பற்றி பேசும் திமுக, சட்டப்பேரவையில் என்னை பேச அனுமதிக்குமா என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்நிலையில், இதுகுறித்து வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் வகையில் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார். அந்நிய மண்ணில் இந்தியாவை ராகுல் அவமதிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. மேலும், திமுகவுக்கு நான் சவால் விடுகிறேன். சட்டப்பேரவையில், குறுக்கீடு இல்லாமல் அரை மணி நேரமாவது பேச என்னை திமுக அரசு அனுமதிக்குமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
 

 

Tags :

Share via