லட்சக்கணக்கான மீன்கள் செத்து மிதந்த காட்சிகள்

by Staff / 19-03-2023 01:34:55pm
லட்சக்கணக்கான மீன்கள் செத்து மிதந்த காட்சிகள்

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் உள்ள டார்லிங் நதியில் லட்சக்கணக்கான மீன்கள் திடீரென செத்து மிதந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வளிமண்டலத்தில் நிலவிய அதிக வெப்பம் காரணமாக தண்ணீரில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால் இது நடந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். உயிரிழந்த மீன்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்நிலையில், ஆற்றில் மீன்கள் இறந்து கிடக்கும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன. அந்த வீடியோவில் நதி முழுவதிலும் தண்ணீரே தெரியாத அளவிற்கு கொத்துக் கொத்தாக மீன்கள் செத்து மிதக்கின்றன.

 

Tags :

Share via