முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங் காலமானார்

by Editor / 08-07-2021 12:40:24pm
முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங் காலமானார்

ஷிம்லா: ஹிமாச்சல பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான வீரபத்ர சிங் இன்று காலமானார். அவருக்கு வயது 87.கடந்த திங்கட்கிழமை(ஜூலை 05)மாரடைப்பு காரணமாக அவர் ஷிம்லாவில் உள்ள இந்திராகாந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதை தொடர்ந்து, வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை அவரது உயிர் பிரிந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.கடந்த ஏப்., 12ல் அவருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டது. சண்டிகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின்னர், குணமடைந்து ஏப்.,30 ல் வீடு திரும்பினார். தொடர்ந்து சில மணி நேரத்தில் மாரடைப்பு மற்றும் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால், அவர் இந்திராகாந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது முதல் அங்கு சிகிச்சை பெற்று வந்தார்.ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் 9 முறை எம்எல்ஏ.,ஆகவும் 5 முறை எம்.பி.,யாகவும் இருந்துள்ளார். 6 முறை முதல்வர் பதவியையும் வகித்து உள்ளார். அவருக்கு பிரதிபா சிங் என்ற மனைவியும், விக்ரமாதித்யா சிங் என்ற மகனும் உள்ளனர். இவர், தற்போது எம்.எல்.ஏ.

 

Tags :

Share via