மக்கள் நீதி மய்ய மகேந்திரன் திமுகவில் இணைந்தார் 

by Editor / 08-07-2021 06:45:12pm
மக்கள் நீதி மய்ய மகேந்திரன் திமுகவில் இணைந்தார் 

 


மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகிய மகேந்திரன் உள்பட 78 நிர்வாகிகள் திமுகவில் வியாழக்கிழமை இணைந்தனர்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகிய மகேந்திரன், பத்மபிரியா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இணைந்துள்ளனர்.
மேலும், திமுகவில் இணையவுள்ள 11,000 பேரின் பெயர் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் சமர்பித்துள்ளார்.
இந்த நிகழ்வில், அமைச்சர் துரைமுருகன், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவராக இருந்தவர் டாக்டர் மகேந்திரன். இவர் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.
நடந்து முடிந்த சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் கோவை பகுதிகளில் மக்கள் நீதி மய்யம் அதிகளவிலான வாக்குகளை பெற முக்கிய காரணமாக உள்ளவர் மகேந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via