பகவதிபுரம் முதல் விருதுநகர் வரை மின்சார ரயில்  இயக்கி சோதனை. 

by Editor / 29-03-2023 09:35:57pm
பகவதிபுரம் முதல் விருதுநகர் வரை மின்சார ரயில்  இயக்கி சோதனை. 

விருதுநகர்-எடமன் இடையே அகல ரயில்பாதையில் மின்மயமாக்கும் பணிகள் கடந்த 2020 ஆம் ஆண்டு துவங்கியது கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்த பணிகளில் தொய்வு ஏற்பட்டதை தொடர்ந்து ஓராண்டு காலமாக பணிகள் நடைபெறாமல் இருந்து வந்தது இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக விருதுநகர்-எடமண் இடையே அகலரயில் பாதையில்  மின் பாதை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இதன் தொடர்ச்சியாக விருதுநகர் முதல் பகவதிபுரம் வரை மின்சார ரயில்  பாதைகள் அமைக்கப்பட்டு அதற்கான மின் விநியோக துணைக்கோட்டங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தென்னக ரயில்வேயின் தலைமை பொறியாளர் சித்தார்த் தலைமையில் மதுரை கோட்ட மேலாளர் ஆனந்த் பத்மநாபன் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் இன்று காலை விருதுநகரில் இருந்து புனலூர் வரை உள்ள அகல ரயில்பாதையில் விருதுநகர் முதல் பகவதிபுரம் வரையில் அமைக்கப்பட்டுள்ள மின்பாதை பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொண்டனர், மேலும் ரயில் நிலையங்களிலும் ஆய்வுகளை மேற்கொண்டனர். பின்னர் புனலூரிலிருந்து பகவதிபுரம் வரை டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட ரயிலில் வந்த அதிகாரிகள் குழுவினர் பகவதிபுரத்திலிருந்து மின்மயமாக்கப்பட்ட பாதையில் மின்சார ரயில் இன்ஜினுக்கு  சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அங்கிருந்து 60 கிலோ மீட்டர் வேகத்தில் செங்கோட்டை வரையிலும், செங்கோட்டையில் இருந்து விருதுநகர் வரை அதிவேகத்தில் 120 கிலோமீட்டர் வேகத்திலும் ரயிலை இயக்கி சோதனைகள் மேற்கொண்டனர் இந்த அதிவேக சோதனை ஓட்டம் இன்று விருதுநகர் நகரில் நிறைவு பெற்றது..

 

Tags :

Share via