போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி

by Staff / 30-03-2023 10:55:54am
போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி

பாப் பிரான்சிஸ் சுவாச தொற்று நோயால் பாதிக்கப்பட்டு இத்தாலியின், ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 86 வயதான அவருக்கு சமீபத்திய நாட்களில் சுவாசிப்பதில் சிரமம் இருந்தது, ஆனால் அவருக்கு கோவிட் இல்லை என்று ஒரு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிசோதனைக்காக போப் புதன்கிழமை மருத்துவமனைக்குச் சென்றதாக வத்திக்கான் முதலில் கூறியிருந்த நிலையில், தொற்று பாதிப்பால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பிரான்சிஸின் உடல்நிலை கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பாதிக்கப்பட்டிருந்தது. முன்னதாக, பெருங்குடல் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதுடன், முழங்கால் வலி காரணமாக சக்கர நாற்காலியையும், வாக்கிங் ஸ்டிக்கையும் பயன்படுத்தி வந்தார்.

 

Tags :

Share via