பார் துப்பாக்கி சூடு; மூன்று பேர் பலி, மூன்று பேர் காயம்

by Staff / 02-04-2023 02:47:15pm
பார் துப்பாக்கி சூடு; மூன்று பேர்  பலி, மூன்று பேர் காயம்

அமெரிக்காவின் ஓக்லஹோமாவில் உள்ள மதுபான விடுதி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், மூன்று பேர் பலத்த காயம் அடைந்தனர். குற்றவாளியை கைது செய்ததாக போலீசார் அறிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று இரவு நடந்துள்ளது. கடந்த வாரம் ஓக்லஹோமாவில் ஒரு பள்ளி துப்பாக்கிச் சூட்டில் குழந்தைகள் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்தியவர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் தலைதூக்கியுள்ள நிலையில், அடிக்கடி துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவது பொதுமக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

 

Tags :

Share via

More stories

Logo