ஆன்லைன் ரம்மியால் பறிபோகும் உயிர்களுக்கு ஆளுநரே பொறுப்பு

by Staff / 03-04-2023 03:51:47pm
ஆன்லைன் ரம்மியால் பறிபோகும் உயிர்களுக்கு ஆளுநரே பொறுப்பு

ஆன்லைன் ரம்மியால் பறிபோகும் ஒவ்வொரு உயிர் இழப்புக்கு ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும் என்று சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கு. செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: உயிர் குடிக்கும் ஆன்லைன் ரம்மியால் மீண்டும் ஒரு உயிர் கொலையில் பறிபோயுள்ளது. இன்று தூத்துக்குடி மாவட்டம், சில்லாநத்தம் கிராமத்தில் லாரி ஓட்டுநர் நல்லதம்பி பல லட்சம் ரூபாயை ஆன்லைன் ரம்மியால் இழந்த நிலையில் தனது அண்ணனிடம் 3 லட்சம் கடன் வாங்கி அதையும் இழந்துள்ளார். இதனால், அண்ணன் அவரது தம்பி நல்லதம்பியை அடித்து ன்றுள்ளார்.தமிழ்நாட்டு மக்கள் மீது சிறிதும் அக்கறை இல்லாத ஆளுநருக்கு இன்னும் எத்துனை உயிர்கள் ஆன்லைன் ரம்மியால் பறிப்போனபின் கருணை உள்ளம் பிறக்கும்? அரசியல் சட்டத்தையும், தமிழ்நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்த அரசையும், மாண்புமிக்க சட்டப்பேரவையையும் மதிக்காத ஆளுநர் தமிழ்நாட்டுக்கு தேவையா? உடனடியாக ஆளுநர் ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்,
இல்லையென்றால் மத்திய அரசு ஆளுநரை திரும்ப பெற வேண்டும். ஆன்லைன் ரம்மியால் பறிபோகும் ஒவ்வொரு உயிர் இழப்புக்கும் ஆளுநர்தான் முழுவதுமாக பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

 

Tags :

Share via