திருப்பதி தேவஸ்தானத்திற்கு 250 ஏக்கர் விவசாய நிலத்தை நன்கொடையாக பக்தர்  வழங்கியுள்ளார்.

by Editor / 11-04-2023 04:49:35pm
திருப்பதி தேவஸ்தானத்திற்கு 250 ஏக்கர் விவசாய நிலத்தை நன்கொடையாக பக்தர்  வழங்கியுள்ளார்.

பெங்களூரைச் சேர்ந்தவர் முரளி கிருஷ்ணா, இவர் திருப்பதி ஏழுமலையான் மீது அதீத பற்றும், பக்தியும் கொண்டவர். இவருக்குச் சொந்தமாக திருப்பதி மாவட்டம் டெக்கலி மற்றும் நெல்லூர் மாவட்டம் போத்திகுண்டா ஆகிய ஊர்களில் 250 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.

இரண்டு ஊர்களிலும் உள்ள 250 ஏக்கர் நிலத்தை முரளி கிருஷ்ணா, ஏழுமலையானுக்கு நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளார். இந்த நிலத்திற்கான ஆவணங்களை ஆந்திர மாநில தலைமை செயலாளர் ஜவகர் ரெட்டி, தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி மற்றும் சாய்தாபுரம், டெக்கலி ஆகிய பகுதிகளின் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோர் பரிசீலனை செய்தனர்.

இந்நிலையில் பக்தர் முரளி கிருஷ்ணா, நன்கொடையாக வழங்கும் 250 ஏக்கர் நிலத்தை திருப்பதி தேவஸ்தானம் பெயருக்கு பத்திர பதிவு செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க தலைமை செயலாளர் ஜவகர் ரெட்டி அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

250 ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்கும் பக்தர் முரளி கிருஷ்ணா, அந்த நிலத்தில் தேவஸ்தானத்தின் பயன்பாட்டிற்குத் தேவையான தானியங்கள், மலர்கள் ஆகியவற்றை தானே பயிரிட்டு வழங்க முன்வந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

Tags :

Share via