ஜெர்மனியில் ஊரடங்குக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் - 600 பேர் கைது

by Admin / 03-08-2021 12:38:50pm
ஜெர்மனியில் ஊரடங்குக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் - 600 பேர் கைது


   
உலக அளவில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் ஜெர்மனி 13-வது இடத்தில் உள்ளது.

ஜெர்மனியில் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கொரோனா தடுப்பூசி போடும் பணிகளைத் தீவிரப்படுத்தி வருகிறது. இதேபோல், ஊரடங்கு கட்டுப்பாடுகளும் கடுமையாக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 5 ஆயிரத்திற்கும் கூடுதலான போராட்டக்காரர்கள் தெருக்களில் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
அவர்களைக் கலைந்து போகும்படி போலீசார் கூறினர். எனினும், இரு தரப்பிலும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், போராட்டம் நடத்தியவர்களில் 600 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசார் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

 

Tags :

Share via