இந்தியாவில் 12,193 பேருக்கு கொரோனா

by Staff / 22-04-2023 12:49:52pm
இந்தியாவில் 12,193 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,193 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 67 ஆயிரத்து 556ஆக உயர்ந்துள்ளது. இதே வேளையில் நேற்று 42 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்த நிலையில், தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 31,300ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை மொத்தமாக இந்தியாவில் 4.48 கோடி பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து உயர்ந்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

 

Tags :

Share via