ஆலோசகராக தோனியை நியமிக்க எதிர்ப்பு

by Editor / 10-09-2021 11:02:49am
ஆலோசகராக தோனியை  நியமிக்க எதிர்ப்பு

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், அக்டோபர் 17 ஆம் தேதி முதல், நவம்பர் 14 ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது. இதற்கான அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலை யில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி, இந்திய அணியின் ஆலோச கராக செயல்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் குஷியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அவரை ஆலோசகராக நியமித்ததற்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

ஒரே நேரத்தில் ஆதாயம் தரும் இரண்டு பதவிகள் வகிக்கக் கூடாது என்பதை லோதா கமிட்டி தெரிவித்துள்ளது. அதைச் சுட்டிக்காட்டி மத்திய பிரதேச கிரிக்கெட் சங்க உறுப்பினர் சஞ்சீவ் குப்தா, சவுரவ் கங்குலிக்கும் ஜெய் ஷாவுக்கும் கடிதம் எழுதியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் தோனி, டி20 உலகக் கோப்பை அணிக்கு எப்படி ஆலோசகராக இருக்க முடியும் என்று அவர் அதில் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆனால், இந்தப் புகாரை இந்திய கிரிக்கெட் வாரியம் நிராகரித்துள்ளது. ஐபிஎல் தொடரை அடுத்து டி-20 உலகக்கோப்பை நடைபெற உள்ளதால், தோனி இந்திய அணியின் ஆலோச கராக இருப்பதில் எந்தச் சிக்கலும் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via