நடிகர் சரத் பாபு கவலைக்கிடம்
பிரபல நடிகர் சரத்(71) பாபு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பிரச்சனை காரணமாக ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல் நிலை பின்தங்கி உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் சரத்பாபு பல முன்னணி ஹீரோக்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். குறிப்பாக ரஜினியின் நடித்த முத்து, அண்ணாமலை ஆகிய படங்களில், அவரது உயிர் நண்பராக நடித்தது இன்றளவும் பேசப்படுகிறது. சில வருடங்களாக திரையுலகை விட்டு விலகியிருந்த சரத்பாபு, கடைசியாக பாபி சிம்ஹாவின் வசந்த முல்லை படத்தில் நடித்திருந்தார்.
Tags :