ஐந்தருவிய தொடர்ந்து குற்றாலம் மெயின் அருவிலும் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை

by Staff / 01-05-2023 05:15:06pm
ஐந்தருவிய தொடர்ந்து குற்றாலம் மெயின் அருவிலும் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை


தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதிகளில் தொடர்ந்து கடந்த மூன்று மணி நேரமாக பெய்து வரும் கனமழை காரணமாக வனப்பகுதியில் உள்ள காட்டற்றில் வெள்ளம் ஏற்பட்டு குற்றாலம் மெயின் அருவிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குற்றால மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு காவல்துறை தடை விதித்துள்ளது. மேலும் குற்றாலம் மெயின் அருவி பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல விடாமல் இருப்பதற்காக இரண்டு பகுதிகளிலும் சுமார் 10 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் தொடர்ந்து தென்காசி மாவட்டத்தில் இன்று மதியம்  முதல் குளுமையான சூழல் நிலவி வருகிறது. இதன் காரணமாகவும் இன்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலம் ஐந்தருவிகளில் குளிக்க குவிந்த வண்ணம் உள்ளனர். மேலும் எப்போதும் ஜூன் மாதம் தொடங்கும் சீசன் முன்னதாகவே மே மாதத்தில் தொடங்கி விட்டது போன்று உள்ளது. அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

Tags :

Share via