சிறுமிகளுக்கு கன்னித்தன்மை சோதனை-தேசிய குழந்தைகள் நல ஆணையம் விளக்கம் கேட்டு கடிதம்

by Admin / 05-05-2023 11:29:48am
 சிறுமிகளுக்கு கன்னித்தன்மை சோதனை-தேசிய குழந்தைகள் நல ஆணையம் விளக்கம் கேட்டு கடிதம்

 சிறுமிகளுக்கு கன்னித்தன்மை சோதனை மேற்கொள்ளப்பட்டது தொடர்பாக ஆளுநர் புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து அறிக்கை அனுப்ப தலைமைச் செயலாளருக்கு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது ..ஆளுநர் .ஆா்.என்.. ரவி  பேட்டியில், இந்து அறநிலையை துறையின் கீழ் இல்லாத சிதம்பர நடராஜர் கோவில் குழந்தை திருமணம் நடைபெற்றதாக புகார் அளிக்கப்பட்டதாகவும்  ஆனால் ,அது போன்று எதுவும் நடக்கவில்லை என்றும் கூறப்பட்டதாக தெரிவித்து இருந்தார்... சிறுமிகளை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று கன்னித்தன்மை சோதனை செய்ததாகவும் இது தொடர்பாக முதலமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்ததாகவும் தெரிவித்திருந்தார் ..ஆளுநரின் இந்த கருத்து தொடர்பாக, தமிழ்நாடு அரசினுடைய தலைமைச் செயலாளருக்கு தேசிய குழந்தைகள் நல ஆணையம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பி உள்ளதோடு ஆளுநர் புகார் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு ஏழு நாட்களுக்குள் அறிக்கை அனுப்புமாறு தலைமைச்செயலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

 

Tags :

Share via