முதல்வர், அமைச்சர்கள் குறித்த அவதூறு வீடியோக்கள் நீக்கம்

by Staff / 05-05-2023 01:53:07pm
முதல்வர், அமைச்சர்கள் குறித்த அவதூறு வீடியோக்கள் நீக்கம்

முதலமைச்சர், ஆளுநர், அமைச்சர்கள் குறித்த 386 அவதூறு வீடியோக்கள் நீக்கப்பட்டதாக சைபர் க்ரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தமிழ்நாடு காவல் துறையின் சைபர் க்ரைம் சார்பில் ;

சமூக வலைதளங்களில், தமிழ்நாடு ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குறித்து அவதூறு பரப்பும் வகையிலான போலி கணக்குகள், வன்முறையை தூண்டும் பதிவுகள், வீடியோக்கள் தடை செய்யப்பட்டு வருகிறது..அந்த வகையில்,386 வீடியோக்களை தடை செய்ய, யூடியூப்-க்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றும். 221 சட்டவிரோத கடன் செயலிகள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளன என்றும் தொிவிக்கப்பட்டுள்ளது.. 

 

Tags :

Share via