இயல்பான மனிதர்கள் ஈடுபட்டிருக்க முடியாது என்றும் இது ஒரு சிக்கலான வழக்கு

by Admin / 06-05-2023 03:27:39pm
 இயல்பான மனிதர்கள் ஈடுபட்டிருக்க முடியாது என்றும் இது ஒரு சிக்கலான வழக்கு

புதுக்கோட்டை வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட விவாகரத்தில் சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில் ,சென்னை உயர்நீதிமன்றம் தனிநபர் ஆணைய தலைவராக சத்திய நாராயணாவை நியமித்தது .அவர் வேங்கை வயலுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ததோடு விசாரணையும் நடத்தினார். இந்த வழக்கு மூன்று மாதத்திற்கு முன்னால்  சிபிசிஐடிக்கி மாற்றப்பட்டது . இதில் சந்தேகப்பட்ட 11 பேருடைய டி என் ஏ யை பரிசோதிக்க வேண்டும். என்று உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியதை அடுத்து சி பி சி ஐ டி போலீசாா் டிஎன்ஏ பரிசோதனைக்கு அழைப்பு விடுத்த நிலையில், மூன்று பேர் மட்டுமே தங்களுடைய ரத்த மாதிரியை அளித்தார்கள் .மீதி எட்டு பேர் தாங்கள்  டி.. என்.ஏ.  சோதனைக்கு உட்பட மாட்டோம் என்று தெரிவித்துள்ள நிலையில், ஆணையத் தலைவர் வேங்கை வயல் சம்பவத்தில் இயல்பான மனிதர்கள் ஈடுபட்டிருக்க முடியாது என்றும் இது ஒரு சிக்கலான வழக்கு சந்தர்ப்பம் அறிவியல் பூர்வமான சாட்சிகளின் அடிப்படையில் தான் வழக்கை அணுக முடியும் என்றும் குற்றவாளிகளை கைது செய்வது ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் இது போன்ற சம்பவங்களை தடுப்பது நமது கடமை என்றும் நீதிபதி சத்யநாராயணா தெரிவித்தார் .

 

Tags :

Share via