இன்று முதல் 11ஆம் தேதி வரை தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.

by Editor / 08-05-2023 08:37:50am
இன்று முதல் 11ஆம் தேதி வரை தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.

வடக்கு தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்று முதல் 11ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே இன்று மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Tags : தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை

Share via