செங்கோட்டை தி.மு.க நகர் மன்ற தலைவரை அதிமுக - பாஜக உறுப்பினர்கள் தாக்க முயற்சி- பரபரப்பு- பதட்டம்

by Staff / 10-05-2023 03:03:25pm
செங்கோட்டை தி.மு.க நகர் மன்ற தலைவரை அதிமுக - பாஜக உறுப்பினர்கள் தாக்க முயற்சி- பரபரப்பு- பதட்டம்

தென்காசி மாவட்டம், செங்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் மாவட்ட திட்டக்குழுவின் கூட்டம் நகர்மன்ற கூட்ட அரங்கத்தில் ஆணையாளர் பொறுப்பு ஜெயப்பிரியா தலைமையில்  நடைபெற்றது.  கூட்டத்தில் நகர் மன்ற தலைவர் ராமலட்சுமி ,திமுக கவுன்சிலர் ரஹீம்,இசக்கிமுத்து பாண்டியன், மேரி, இசக்கியம்மாள், சந்திரா தேவி, சரவணன் கார்த்திகா, காங்கிரஸ் கவுன்சிலர் முருகையா, பாரதிய ஜனதா கவுன்சிலர்கள் ராம்குமார். செண்பகராஜ், வேம்பு ராஜ்,அதிமுக கவுன்சிலர்கள் சுடர் ஒளி, முத்துப்பாண்டி, சுப்பிரமணியன், ஜெகன், இந்துமதி, சரஸ்வதி, சுமதி, உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். திட்டக்குழு கூட்டம் நடந்து கொண்டிருந்த பொழுது நகர் மன்ற தலைவர் ராம லெட்சுமி அந்த கூட்டத்தை விட்டு வெளியேறி தனது அலுவலகத்திற்கு வந்து அமர்ந்து கொண்டார்,  அதிமுக கவுன்சிலர்கள், இந்த கூட்டத்தை புறக்கணித்து சென்ற காரணத்தை தலைவர் தெரிவிக்க வேண்டும் என்றும் தலைவர் உடனே வர வேண்டும் என்றும் ஆணையாளர் ஜெயபிரியாவிடம் வலியுறுத்தினர் ..ஆனால் ,ஜெயப்பிரியா இது நகர் மன்ற கூட்டம் அல்ல.. திட்டக்குழு கூட்டம். இதில் அரசின் உத்திரப்படி கூட்டம் நடைபெறுவதாக தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாக நகர் மன்ற தலைவர் ராமலட்சுமி இருந்த அறைக்குள் அதிமுக கள் கவுன்சிலர் சுடரொளி, ஜெகன், முத்துப்பாண்டி, பாஜக கவுன்சிலர் ராம்குமார் அதிமுக கவுன்சிலர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் சென்றனர். அப்பொழுது முன்னாள் துணைத் தலைவர் கணேசன் உள்ளிட்டோரும் நகர்மன்ற தலைவர் அறைக்கு சென்றனர் திடீரென நகர் மன்ற தலைவர் ராமலட்சுமிக்கும், நகர மன்ற உறுப்பினர் முத்துப்பாண்டி, ஜெகன், சுப்பிரமணியன், சுடர் ஒளி மற்றும் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் ராம்குமார் உள்ளிட்டோர் வ்நகர் மன்ற தலைவரை மிகவும் ஆபாசமாகவும் அசிங்கமாகவும் பேசினர்.அப்பொழுது நாகர் மன்ற தலைவரும் பதிலுக்கு பேசிக் கொண்டிருந்த பொழுது வாக்குவாதம் மோதலாக உருவெடுத்தது. இதன் தொடர்ச்சியாக அதிமுக கவுன்சிலர் சுடரொளி,முத்துப்பாண்டி,பாஜக கவுன்சிலர் ராம்குமார், திமுக நகரமன்ற தலைவர் ராமலட்சுமியை தாக்க முயற்சி செய்தார் கள்பாஜகவை சேர்ந்த ராம்குமார் சேர்மனுடைய டேபிளில் ஓங்கி ஓங்கி அடித்துக்கொண்டு அவரை ஆபாசமாகவும் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது முத்துப்பாண்டி தலைவரை தாக்க முற்ப்பட்டார். இதனை தொடர்ந்து முன்னாள் துணைத் தலைவர் கணேசன் இடைமறித்து தாக்குதலை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதன் தொடர்ச்சியாக அதிமுக நகர்மன்ற உறுப்பினர் சுடர் ஒளி திமுக நகர் மன்ற தலைவர் ராமலட்சுமி அருகில் சென்று அடித்து விடுவேன் என இருவரும் மாறி மாறி பேசிக் கொண்டிருந்தபோது திடீரென சுடரொளி நகர் மன்ற தலைவர் ராமலட்சுமி தாக்க முயற்சி செய்த பொழுது ராமலக்ஷ்மி அதை தடுக்கும் விதமாக சுடரொளியை பிடித்து தள்ளினார். இதன் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.இதனை தொடர்ந்து நகரமன்ற தலைவர் அறையை விட்டு அதிமுக மற்றும் பாஜக கவுன்சிலர்களின் வெளியேறினார்.மேலும் இதுகுறித்து நகர்மன்ற தலைவர் செங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்ததை தொடர்ந்து செங்கோட்டை போலீசார் விரைந்து வந்தனர் மேலும் நகர மன்ற தலைவர் அறைக்கு செல்ல வேண்டாம் என அதிமுக கவுன்சிலர் களையும், பிஜேபி கவுன்சிலர்களையும் ஆணையாளர் பொறுப்பு ஜெயக்பிரியா வலியுறுத்தியும் அவர்கள் அத்துமீறி நுழைந்து இந்த மோதலில் ஈடுப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன இதன் காரணமாக செங்கோட்டை பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

 

Tags :

Share via