தாறுமாறாக உயர்கிறது தங்கம் விலை ரூ.200 உயர்வு.

by Editor / 10-05-2023 08:50:51pm
தாறுமாறாக உயர்கிறது தங்கம் விலை ரூ.200 உயர்வு.

தங்கத்தின் விலை கடந்த இரண்டு மாதங்களாக தினந்தோறும் ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. கடந்த மாதம் அட்சய திருதியை சமயத்தில் குறைக்கப்பட்ட தங்கத்தின் விலையானது தினந்தோறும் உயர்ந்தது. இந்நிலையில், தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 200 உயர்ந்து, சவரன் 45 ஆயிரத்து 936‬ ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 25 ரூபாய் உயர்ந்து ரூ.5,742க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் 82.70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 

 

Tags :

Share via