அதானி குழும விவகாரம் மே 15க்குள்  விரைவாக முடிக்க வேண்டும்-உச்ச நீதிமன்றம்

by Admin / 12-05-2023 09:35:05pm
அதானி குழும விவகாரம் மே 15க்குள்  விரைவாக முடிக்க வேண்டும்-உச்ச நீதிமன்றம்

அதானி குழுமம் பங்கு விலைகளில் மிக அதிக அளவு விலை வைத்து மோசடியில் ஈடுபட்ட தாகவும் போலி நிறுவனங்கள் மூலம் அதிக அளவில் கடன்களை பெற்றுள்ளதாகவும் அதானி குழுமத்தின்  மீது அமெரிக்காவில் உள்ள ஹிண்டன் பார்க் ஆய்வு நிறுவனம் குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து  அதானிய குடும்பத்தின் சொத்து மற்றும் பங்கு என்னுடைய விலை வீழ்ச்சி அடைந்து பெரும் சரிவை அதானி நிறுவனம் அடைந்தது.ஹிண்டன் பார்க் அறிக்கையில் வெளிப்படுத்திய அதானி குழும விவகாரம் குறித்து உரிய விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் மக்களவை மாநில அளவில் குரல் எழுப்பினர். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது . உச்சநீதி மன்றம்  அதானி  நிறுவனம்   பங்கு முறைகேட்டில் ஈடுபட்டதா  என்பதை ஆய்வு செய்து விசாரணை நடத்துவதற்கு  மத்தி ய அரசு நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தது ..  அதன்படி  மே மாதம் இரண்டாம் தேதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று  செபி க்கு உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டிருந்த நிலையில்  செபி  இந்த  குறிப்பிட்ட கால கட்டத்திற்குள் முழுமையான அறிக்கையை தாக்கல் செய்ய முடியாது என்றும்  மேலும் ஆறு மாசம் அவகாசம் வேண்டும் என்று கூறி இருந்தது இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் மேலும் ஆறு மாசம் கால அவகாசம் வழங்க முடியாது என்றும் மே 15க்குள்  விரைவாக முடிக்க வேண்டும்  என்று விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டது, உச்ச நீதிமன்றம்

 

 

Tags :

Share via