கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று மாலை நடக்கிறது.

by Editor / 14-05-2023 04:49:56pm
கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று மாலை நடக்கிறது.

கர்நாடகா காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் தேர்வு தொடர்பாக மூன்று பார்வையாளர்களை நியமித்துள்ளது காங்கிரஸ் கட்சி. சுசில் குமார் ஷிண்டே, ஜிதேந்திர சிங் மற்றும் தீபக் பபாரியா ஆகிய மூவர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி அடைந்ததை தொடர்ந்து யார் முதல்வர் என்று தேர்வு செய்வதற்கு ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. சித்தராமையாவா அல்லது டி கே சிவகுமாரா என்பது குறித்து அடுத்த கட்டமாக ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு பெங்களூரில் நடைபெற உள்ளது.

 

Tags :

Share via