4 மாநில சட்டப்பேரவைகளுக்குத் தேர்தல் எப்போது

by Staff / 16-03-2024 05:25:54pm
4 மாநில சட்டப்பேரவைகளுக்குத் தேர்தல் எப்போது

ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் எப்போது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அருணாச்சலப் பிரதேசத்துக்கு ஏப்ரல் 19ஆம் தேதியும் ஆந்திரப்பிரதேசத்திற்கு மே 13ஆம் தேதியும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஒடிசா மாநிலத்துக்கு மே 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாகத் தேர்வு நடைபெற உள்ளது. சிக்கிம் மாநிலத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. அதே போல தமிழ்நாட்டு விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது.

 

Tags :

Share via