சல்மான் கானின் சகோதரி வீட்டில் திருடிய வீட்டுக்காவலர் கைது

by Staff / 18-05-2023 11:53:30am
சல்மான் கானின் சகோதரி வீட்டில் திருடிய வீட்டுக்காவலர் கைது

பாலிவுட் நடிகர் சல்மான் கானின் சகோதரி அர்பிதாவின் வீட்டில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள் திருடப்பட்டன. இது தொடர்பாக அவரது வீட்டில் பணிபுரியும் ஊழியர் சந்தீப் ஹெக்டே கைது செய்யப்பட்டார். அர்பிதா வீட்டில் சந்தீப் உள்பட 12 பேர் வேலை பார்க்கிறார்கள். திருடப்பட்ட நகைகள் குற்றவாளியின் வீட்டில் இருந்து மீட்கப்பட்டன. திருட்டுக்குப் பிறகு சந்தீப் தப்பி ஓடியதாக போலீசார் தெரிவித்தனர். இதே போல் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவின் வீட்டிலும் சில மாதங்களுக்கு முன்பு நகைகள் திருடப்பட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

 

Tags :

Share via