சட்டை பாக்கெட்டில் வெடித்து சிதறிய செல்போன்

by Staff / 19-05-2023 12:39:24pm
சட்டை பாக்கெட்டில் வெடித்து சிதறிய செல்போன்

முதியவரின் சட்டை பாக்கெட்டில் இருந்த செல்போன் திடீரென வெடித்து சிதறிய சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது. திருச்சூரில் 76 வயது முதியவர் ஒருவர் ஹோட்டலுக்கு டிபன் சாப்பிடச் சென்றார். அங்கு நாற்காலியில் அமர்ந்திருந்த போது திடீரென பாக்கெட்டில் இருந்த போன் வெடித்து முதியவரின் சட்டை தீப்பிடித்து எரிந்தது. இதனால் பதற்றமடைந்த அவர் போனை கீழே போட்டுவிட்டு கையால் தீயை அணைத்தார். இந்த காட்சிகள் ஹோட்டலின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சமீபத்தில் போன் வெடித்து 8 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via