ராஜீவ் காந்தி நினைவு தினம்.. குடும்பத்தினர் மரியாதை

by Staff / 21-05-2023 12:34:46pm
ராஜீவ் காந்தி நினைவு தினம்.. குடும்பத்தினர் மரியாதை

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 32வது நினைவு தினத்தையொட்டி டெல்லியில் உள்ள அவர் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும், டெல்லியில் உள்ள வீர் பூமி என்ற பகுதியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் பல தலைவர்களும் மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும், சென்னை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் இன்று காலை 8 மணிக்கு ராகுல்காந்தி அஞ்சலி செலுத்துவதாக அறிவித்த நிலையில், தவிர்க்க முடியாத காரணத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 

Tags :

Share via