மான் கறி சமைத்து சாப்பிட்ட 6 பேருக்கு ரூ.3 இலட்சம் அபராதம்.

by Editor / 21-01-2023 10:58:52pm
மான் கறி சமைத்து சாப்பிட்ட 6 பேருக்கு ரூ.3 இலட்சம் அபராதம்.

தென்காசி மாவட்ட மேற்குதொடர்ச்சிமலைப்பகுதியான  சிவகிரி வனச்சரகபகுதிகளில் வனவிலங்குகள் அதிகமாக வசித்துவருகின்றன.இந்த நிலையில் வேட்டைநாய்களை வனப்பாகுதிக்குள் கொண்டு சென்று ஒருகும்பல் வேட்டையாடியதாக மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரின காப்பாளர் முருகனுக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து அவரது உத்தரவுப்படி சிவகிரி தெற்கு பிரிவு கருப்பசாமி கோவில் எல்லைக்குட்பட்ட துரைச்சாமியாபுரம் கிராமத்தில் உள்ள குருசாமி மகன் கணேஷ் குமார், இந்திரா காலனி அந்தோணி மகன் இமானுவேல் இளவரசன், மஞ்சள் குப்பன் தெரு சின்ன மிக்கேல்  மகன் சுபாஷ் சந்திரபோஸ், கணேசன் மகன் கனகராஜ், சீனிவாச கடைத்தெரு தமிழ்ராஜ் மகன் சதீஷ்குமார், சீனிவாசன், கடைத்தெரு பேச்சியப்பன் மகன் சிவக்குமார், ஆகியோர்களின் வீடுகளில் மான்கறி சமைத்து சாப்பிடுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து கடையநல்லூர் வனச்சரகர் சுரேஷ் தலைமையில் சிவகிரி வடக்கு பிரிவு வடபத் அசோக்குமார் சிவகிரி தெற்கு பிரிவு வனவர்  அஜித்குமார் மற்றும் வனக்காப்பாளர்கள் சுதாகர், பாரதி கண்ணன், அருண்மொழி, பிரதீப், சையது பாவாசா, வேட்டைத் திறப்பு காவலர்கள் ஆனந்தன் மாரியப்பன், சரவணன், பாலசுப்ரமணியம் ,ஆகியோர் தனிக்குழுவாக மேற்படி நபர்களில் வீடுகளில் ஆய்வுகள் மேற்கொண்டனர் அப்பொழுது அவர்களின் வீட்டில் வைத்து மான்கறியை சமைத்து சாப்பிட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரின காப்பாளர் உத்தரவுப்படி ஒரு நபருக்கு தல ஐம்பதாயிரம் விதம் மொத்தம் ஆறு நபர்களுக்கு மூன்று லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

 

Tags :

Share via