முதன் முதலாக இயக்கப்பட்ட மதுரை-தேனி-மதுரை விரைவு சிறப்பு ரயிலுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு

by Editor / 27-05-2022 09:05:20pm
முதன் முதலாக இயக்கப்பட்ட மதுரை-தேனி-மதுரை விரைவு சிறப்பு ரயிலுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு

 மதுரையில் இருந்து வடபழஞ்சி, உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி ஆகிய ரயில் நிலையங்களுக்கு முறையே 19, 31, 33, 273 பயணிகள் பயணி சீட்டு பெற்றுள்ளனர். 

அதன் மூலம் பெற்ற வருமானம் ரூபாய் 14940 ஆகும். வடபழஞ்சியிலிருந்து உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி ஆகிய ரயில் நிலையங்களுக்கு முறையே 7, 10, 27 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதன் மூலம் ரூபாய் 1590 வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. 

உசிலம்பட்டியில் இருந்து தேனிக்கு 109 பயணிகள் ரூபாய் 3270 கட்டணம் செலுத்தி பயணம் செய்துள்ளனர். ஆண்டிபட்டியில் இருந்து தேனிக்கு 65 பயணிகள் ரூபாய் 1950 கட்டணம் செலுத்தி பயணம் செய்துள்ளனர் இன்று இந்த ரயிலில் மொத்தமாக 874 பயணிகள் பயணம் செய்ததில் ரூபாய் 21750 வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

தேனி  - மதுரை ரயில் பயணிகள் விவரம்;தேனியில் இருந்து 377 பயணிகள் வருமானம்: Rs. 16955/-. .
ஆண்டிபட்டியில் இருந்து 213 பயணிகள் வருமானம்Rs. 7476/- உசிலம்பட்டியில் இருந்து மதுரைக்கு 44 பயணிகள் வருமானம்.மொத்தமாக பயணம் செய்த பயணிகள் 634 மொத்த வருமானம் ரூபாய் 25751

 

Tags : Welcome to the first Madurai-Theni-Madurai express train

Share via