டி.வி.எஸ். மோட்டார்ஸ் பைக், ஸ்கூட்டர் விற்பனை அதிகரிப்பு

by Editor / 03-09-2021 03:36:58pm
டி.வி.எஸ். மோட்டார்ஸ் பைக், ஸ்கூட்டர் விற்பனை அதிகரிப்பு

சென்னையைச் சேர்ந்த டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் ஆகஸ்ட் மாத வாகன விற்பனை 1% அதிகரித்துள்ளது என்று இணை நிர்வாக இயக்குனர் சுதர்சன் வேணு தெரிவித்தார்.இது குறித்து குறித்து அந்நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

இந்நிறுவனம் கடந்த மாதம் மொத்தம் 2 லட்சத்து 90 ஆயிரத்து 694 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டு (2020) ஆகஸ்ட் மாதத்தில் 2 லட்சத்து 87 ஆயிரத்து 398 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 1% மட்டுமே அதிகமாகும். இதே காலக்கட்டத்தில் நிறுவனத்தின் மொத்த இரு சக்கர வாகன விற்பனை 2 லட்சத்து 77 ஆயிரத்து 226 என்ற எண்ணிக்கையிலிருந்து 2 லட்சத்து 74 ஆயிரத்து 313ஆக குறைந்துள்ளது.

அதிலும் உள்நாட்டு சந்தையில் இரு சக்கர வாகனங்களின் விற்பனை 18% சரிவடைந்து 1 லட்சத்து 79 ஆயிரத்து 999 ஆனது. கடந்த ஆண்டு (2020) ஆகஸ்ட் மாத விற்பனை 2 லட்சத்து 2 லட்சத்து 18 ஆயிரத்து 338 ஆக அதிகரித்தது.

மோட்டார் சைக்கிள் விற்பனை கடந்த மாதம் 1 லட்சத்து 19 ஆயிரத்து 878லிருந்து 1 லட்சத்து 33 ஆயிரத்து 789 ஆகவும், ஸ்கூட்டர் விற்பனை 87 ஆயிரத்து 044 லிருந்து 87 ஆயிரத்து 059ஆகவும் உயர்ந்துள்ளன. நிறுவனத்தின் ஒட்டுமொத்த வாகன ஏற்றுமதி 68 ஆயிரத்து 347 என்ற எண்ணிக்கையிலிருந்து 61% வளர்ச்சியை பதிவு செய்து 1 லட்சத்து 09 ஆயிரத்து 927 ஆனது. மூன்று சக்கர வாகன பிரிவில் விற்பனை 10 ஆயிரத்து 172 லிருந்து 61% அதிகரித்து 16 ஆயிரத்து 681 ஆனது என்று அவர் தெரிவித்தார்.

 

Tags :

Share via