எடப்பாடி பழனிச்சாமி கிங் மாதிரி இருந்து திமுகவிற்கு சங்கு ஊதி வருகிறார் -நடிகர் சிங்கமுத்து.

by Editor / 04-04-2024 09:49:23am
எடப்பாடி பழனிச்சாமி கிங் மாதிரி இருந்து திமுகவிற்கு சங்கு ஊதி வருகிறார் -நடிகர் சிங்கமுத்து.

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சிவசாமி வேலுமணியை ஆதரித்து கயத்தாறில் திரைப்பட நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து , முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ, திரைப்பட இயக்குனர் நாஞ்சில் அன்பழகன்  ஆகியோர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து பேசுகையில் மக்கள் எப்போது என்று எதிர்பார்த்த தேர்தல் வந்துவிட்டது.எடப்பாடி பழனிச்சாமி கிங் மாதிரி இருந்து திமுகவிற்கு சங்கு ஊதி வருகிறார். திமுக கட்சி என்பது வாரிசு கட்சி ‌ மக்களை எப்படி ஏமாற்ற வேண்டும் என்று திமுகவிற்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பயிற்சி கொடுத்துள்ளார்.
சிறுபான்மைகளுக்கு எதிராக பாஜக இருப்பதால் முன்னாள் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்று வலியுறுத்தியதால் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி  பாஜகவுடன் கூட்டணி நிலை என்ற அறிவித்தார்.
திமுகவிற்கு கள்ளக்காதல் பண்ணி பழக்கம் என்பதால் அதிமுக - பாஜக கள்ளக்காதல் என்று முதல்வர் கூறி வருகிறார்.திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை..அதிமுக ஆட்சி காலத்தில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.இதனால் அனைவரும் அறிவாளியாக மாறிவிட்டதால் தங்கள் பொய் சொல்ல முடியாது என்பதால் இன்றைக்கு  திமுக ஆட்சியில் போதை பழக்கம் அதிகரிக்க வைத்துள்ளனர்.‌பொய்யை உண்மை போல் சொல்பவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்.வருங்கால நமது வாரிசுகளுக்கு நல்ல காலம் அமைய வேண்டும் என்றால் அதிமுகவிற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும், திமுகவிற்கு வாக்களித்தால் தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும் என்றார்

 

Tags : எடப்பாடி பழனிச்சாமி கிங் மாதிரி இருந்து திமுகவிற்கு சங்கு ஊதி வருகிறார் -நடிகர் சிங்கமுத்து.

Share via