ஜிகே வாசன் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் அட்ராசிட்டி செய்த குடிமகன்.

by Editor / 04-04-2024 09:46:26am
ஜிகே வாசன் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் அட்ராசிட்டி செய்த குடிமகன்.

தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் என்றாலே கட்சிகளின் தொண்டர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான். சொல்லப்போனால் அவர்களுக்கு தேர்தல் ஒரு திருவிழா. இந்த  திருவிழாவில் ஏதாவது ஒரு வினோதமான நிகழ்வு தினம் தோறும் நடந்து கொண்டே இருக்கிறது. அதன் அடிப்படையில் இன்று நாசரேத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் விஜயசீலனை ஆதரித்து தேர்தல் பரப்புரை செய்ய வந்திருந்தார். அவர் வருவதற்கு முன்பாக பாஜக தொண்டர்கள் மற்றும் தமாகா தொண்டர்கள் அதன் கூட்டணி தொண்டர்கள் என ஏராளமானோர் கூடியிருந்தனர். பாஜக நிர்வாகிகள் வாகனத்தின் மேல் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அதில் ஒரு தொண்டர் அந்த வாகனம் அருகே நின்று கொண்டு அவர் பேசும் பேச்சுக்கு எதிர் பேச்சு பேசிக் கொண்டிருந்தார். அவர் மது போதையில் இருந்ததால் அவரால் சரியாக நிற்க கூட முடியவில்லை. பின்னர் அவரது ஆடை அவிழ்வது கூட தெரியாமல் கை கால்களை ஆட்டிக்கொண்டு தள்ளாடியபடி  இருந்தார். அப்போது அங்கு வந்த காவலர் ஒருவர் அவரை அப்புறப்படுத்த முயன்றார் ஆனால் அவர் செல்ல மறுத்துவிட்டார். பின்னர் தொண்டர் ஒருவரை அழைத்து அவரை அழைத்துச் செல்லுமாறு பேசினார் பின்னர் தொண்டர் ஒருவர் வந்து அவரை வலுக்கட்டாயமாக இழுத்து சென்றார். கூட்டத்திற்கு வந்த பொதுமக்கள் பாஜக மாநில தலைவரோ மதுவை ஒழிப்போம் என பேசிக்கொண்டு இருக்கிறார். ஆனால் அவர் கட்சியை சார்ந்தவர்களோ மது போதையில் கூட்டம் நடக்கும் இடத்தில் அநாகரிகமாக நடந்து கொள்கின்றனர் என முனுமுனுத்து சென்றனர்.

 

Tags : ஜிகே வாசன் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் அட்ராசிட்டி செய்த குடிமகன்.

Share via