சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜய்குமார்  கங்காபூர்வாலா பதவி ஏற்றுக் கொண்டார்

by Editor / 28-05-2023 11:43:41am
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜய்குமார்  கங்காபூர்வாலா பதவி ஏற்றுக் கொண்டார்

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜய்குமார்  கங்காபூர்வாலா பதவி ஏற்றுக் கொண்டார்.தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

சுதந்திர இந்தியாவின் சென்னை உயர் நீதிமன்றத்தின் 33 ஆவது தலைமை நீதிபதியாக பதவி ஏற்றுக் கொண்டார்.சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனீஸ்வரர்நாத் பண்டாரி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பணி ஓய்வு பெற்றார். 

இதனை அடுத்து மூத்த நீதிபதி எம்.துரைச்சாமி, நீதிபதி டி.ராஜா ஆகியோர் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்து பணி ஓய்வு பெற்றனர். கடந்த 8 மாதங்களாக தலைமை நீதிபதி பணியிடம் நிறப்ப படமால் இருந்து வந்தது.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற கொலீஜியம் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி மும்பை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.வி.கங்கா பூர்வாலாவை, சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கும், குடியரசுத் தலைவருக்கும் பரிந்துரை செய்தது. 

இந்த பரிந்துரையை ஏற்ற குடியரசு தலைவர், நேற்று முன்தினம் எஸ்.வி.கங்கா பூர்வாலாவை தலைமை நீதிபதியாக நியமிக்க உத்தரவிட்டார்.

இதனையடுத்து தலைமை நீதிபதியாக இன்று காலை 10 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் எஸ்.வி.கங்கா பூர்வாலா பதவி எற்றுக் கொண்டார். அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார். விடுதலை பெற்ற பிறகு சென்னை உயர்நீதிமன்றத்தின் 33 ஆவது தலைமை நீதிபதி ஆவார்.

இந்த நிகழ்ச்சியில், உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், கொல்கத்தா உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி டி.எஸ்.சிவஞானம், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.வைதியாநாதன், ஆர்.மகாதேவன் உள்ளிட்ட நீதிபதிகள் அமைச்சர்கள், துரைமுருகன், ரகுபதி, உதயநிதி ஸ்டாலின், கே.கே.எஸ்.எஸ். மா.சுப்பிரமணியம், உள்ளிட்டோரும், சபாநாயகர் அப்பாவு, தலைமைச் செயலாளர்  தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், அரசு வழக்கறிஞர்கள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள், மூத்த வழக்கறிஞர்கள், எதிர்கட்சி துணை தலைவர் ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 புதிய தலைமை நீதிபதிக்கு அமைச்சர்கள் பூங்கொத்து மற்றும் புத்தகம் அளித்து வாழ்த்து தொரிவித்தனர்.கடந்த 1962ம் ஆண்டு மே மாதம் மகாராஷ்டிராவில் பிறந்த நீதிபதி கங்காபூர்வாலா, சட்டப்படிப்பை முடித்து, 1985ம் ஆண்டு வழக்கறிஞர் பணியை தொடங்கினார். 

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜய்குமார்  கங்காபூர்வாலா பதவி ஏற்றுக் கொண்டார்
 

Tags :

Share via