ஒடிசா ரயில் விபத்து.. பிரதமர் விளக்கமளிக்க வேண்டும்

by Staff / 05-06-2023 02:25:07pm
ஒடிசா ரயில் விபத்து.. பிரதமர் விளக்கமளிக்க வேண்டும்

ஒடிசா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 294 பேர் உயிரிழந்த நிலையில் 900க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், “இந்திய வரலாற்றில் மிக மோசமான ரயில் விபத்தாக ஒடிசா பாலசோர் ரயில் விபத்து உள்ளது. இது குறித்து பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும். இந்திய ரயில்வேயில் 4% வழித்தடங்களில் மட்டுமே கவச் பாதுகாப்பு கருவி பொருத்தப்பட்டிருப்பது ஏன்? ரயில்வேயில் உள்ள காலிப்பணியிடங்கள் 9 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருப்பது ஏன்?” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via