அண்ணாமலை பல்கலை. 4 மாவட்ட கல்லூரிகள் இணைக்கப்படும்: அமைச்சர் பொன்முடி

by Editor / 21-07-2021 08:48:52am
அண்ணாமலை பல்கலை. 4 மாவட்ட கல்லூரிகள் இணைக்கப்படும்: அமைச்சர் பொன்முடி

சென்னை தலைமை செயலகத்தில் உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி  செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்;

அண்ணாமலை பல்கலைக்கழகம் கூட்டுப் பல்கலைக்கழகமாக உருவாக்கப்படும்.

விழுப்புரத்தில் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலையுடன் இணைக்கப்படும்.

அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் 4 மாவட்ட கல்லூரிகளை இணைக்கும் திட்டம் உள்ளது. 

விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளை அண்ணாமலை பல்கலைகழகத்துடன் இணைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

கல்வித்துறையின் நிதிநிலையை பொறுத்து அண்ணாமலை பல்கலையுடன் இணைக்கும் பணிகள் நடைபெறுகிறது.

பெயரளவு தொடங்கப்பட்ட ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகம் தனித்து செயல்பட முடியாது. முன்னாள் தாலுகா அலுவலகத்தில்தான் தற்போது ஒரு பெயர்ப் பலகை வைக்கப்பட்டு உள்ளது.  ஜெ. ஜெயலலிதா  சட்டப் பல்கலைக்கழகம் என்று பெயர் வைத்ததை தவிர நிதி ஒதுக்கீடோ வேறு ஏற்பாடோ செய்யப்படவில்லை. 

ஜெ. ஜெயலலிதா சட்டப் பல்கலைக்கழகத்துக்கு துணை வேந்தர் மட்டுமே நியமிக்கப்பட்டு உள்ளார்.

ஜெ. ஜெயலலிதா  பல்கலைக்கழகத்துக்கு பதிவாளரோ, வேறு அதிகாரிகளோ நியமிக்கப்படவில்லை. ஜெயலலிதா பெயரிலான பல்கலைக்கழகத்துக்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை

இவ்வாறு, உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.

 

Tags :

Share via