குழந்தைகள் உள்பட 6 பேர் கொலை

by Staff / 10-07-2023 05:26:53pm
குழந்தைகள் உள்பட 6 பேர் கொலை தென்கிழக்கு சீனாவில் உள்ள மழலையர் பள்ளியில் திங்கள்கிழமையான இன்று ஒரு பயங்கரமான சம்பவம் நடந்தது. குவாங்டாங் மாகாணத்தின் லியான்ஜியாங்கில், ஒரு நபர் கொடூரமாக ஆறு பேரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். மற்றொருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உயிரிழந்தவர்களில் மூன்று குழந்தைகளும் இருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இச்சம்பவத்தில் 25 வயது மதிக்கத்தக்க ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
 

Tags :

Share via