பொதுசிவில் சட்டத்திற்கு திமுக கடும் எதிர்ப்பு

by Staff / 12-07-2023 01:13:59pm
பொதுசிவில் சட்டத்திற்கு திமுக கடும் எதிர்ப்பு பொது சிவில் சட்டம் நடைமுறைக்கு வந்தால் நாட்டின் மதச்சார்பின்மைக்கு குந்தகம் ஏற்படும் என்று திமுக சார்பில் பொதுச் செயலாளர் துரைமுருகன் சட்ட ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், &#39;பொது சிவில் சட்டத்தால் நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு, அமைதியின்மை உருவாகும். பொது சிவில் சட்டத்துக்கு அனுமதி கொடுக்கக் கூடாது. இந்துமத சாதிகளுக்கிடையே பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றி சாதீய ஏற்றத்தாழ்வை சமன் செய்ய வேண்டும். 22வது சட்ட ஆணையம் 21வது சட்ட ஆணையத்தின் பரிந்துரைகளைக் கருத்தில் கொண்டு, பொது சிவில் சட்டத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது&#39; என வலியுறுத்தியுள்ளார். <br /> &nbsp;
 

Tags :

Share via