இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதியில் சாமி தரிசனம்

by Staff / 13-07-2023 01:21:33pm
இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதியில் சாமி தரிசனம் சந்திராயன்-3 விண்கலம் நாளை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்திலிருந்து இஸ்ரோ மூலம் விண்ணில் செலுத்தப்படுகிறது. நிலவின் தென்துருவத்திற்கு அனுப்பப்பட உள்ள இந்த சந்திராயன்-3 விண்கலம் சுமார் 615 கோடி ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 3900 கிலோ எடை கொண்ட சந்திராயன்-3 விண்கலம் நாளை பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. ஏற்கெனவே சந்திரயான்-3 விண்கலத்தின் இறுதிகட்ட சோதனைகளும் வெற்றிகரமாக நடத்தப்பட்ட நிலையில், நாளை செலுத்தப்பட உள்ள சந்திராயன்-3 விண்கலம் வெற்றியடைய வேண்டும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் இன்று திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.
 

Tags :

Share via