மணிப்பூர் கொடூரம் - முக்கிய குற்றவாளி இன்று அதிரடி கைது.

by Editor / 20-07-2023 08:09:59pm
மணிப்பூர் கொடூரம் - முக்கிய குற்றவாளி இன்று அதிரடி கைது.

மணிப்பூரில் இளம்பெண்ணின் ஆடைகளை களைந்து பாலியல் துன்புறத்தலில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியை போலீசார் இன்று கைது செய்தனர். கைதான முக்கிய குற்றவாளியின் புகைப்படத்தையும் மணிப்பூர் போலீசார் வெளியிட்டுள்ளனர். கைதான நபரின் பெயர் ஹுய்ரெம் ஹீரோதாஸ் மெய்தெய் (32) என மணிப்பூர் அரசு தகவல் தெரிவித்துள்ளது. தற்போது அவனை கைது செய்து போலீசார் கஸ்டடியில் வைத்துள்ளனர். முன்னதாக, இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்களுக்கு உட்சபட்ச தண்டனை வழங்கப்படும் என மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் தெரிவித்திருந்தார். மேலும், அனைத்து குற்றவாளிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via