குற்றால அருவிகளில் விடுமுறைதினத்தை உன்னிட்டு குவிந்த சுற்றுலாப்பயணிகள்

by Editor / 30-07-2023 10:43:15am
குற்றால அருவிகளில் விடுமுறைதினத்தை உன்னிட்டு குவிந்த சுற்றுலாப்பயணிகள்

தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான குற்றாலத்தில் தற்பொழுது சீசன் காலம் ஆகும். இதன் தொடர்ச்சியாக குற்றாலத்தில் உள்ள அருவி களில் குளிக்க  நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் திரண்டுவந்து குளித்து சென்ற வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை இல்லாத நிலை நீடித்து வருவதால் குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலி அருவி, சிற்றருவி, உள்ளிட்ட அனைத்து அருவி களிலும் நீர்வரத்து குறைந்த அளவு கொட்டுகிறது மேலும் இன்று விடுமுறை தினம் என்பதால் குற்றாலம் பேரருவியில் குளிப்பதற்கு  ஏராளமான பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் திரண்டு வந்த வண்ணம் உள்ளனர் மேலும் குற்றாலம் பேரருவியில் ஆண்கள் கூட்டத்தை விட பெண்கள் கூட்டம் அளவுக்கு அதிகமாக உள்ளதால் நீண்ட வரிசையில் நின்று பெண்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.பெண் போலீசார் அவர்களை குழுவாக குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் மேலும் போதிய அளவு காவலர்கள் பாதுகாப்பு பணியில் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.

 

Tags :

Share via