. பழனி முருகன் கோவிலில் இந்துக்கள் அல்லாதவர் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்ற அறிவிப்பு பலகைமீண்டும் வைக்க வேண்டும்

by Admin / 01-08-2023 08:59:22am
. பழனி முருகன் கோவிலில் இந்துக்கள் அல்லாதவர் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்ற அறிவிப்பு பலகைமீண்டும் வைக்க வேண்டும்

பழனி முருகன் கோவிலில் இந்துக்கள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்ற அறிவுப்பு   வைக்கப்பட்டிருந்தது. சில காரணங்களுக்காக அது அகற்றப்பட்டது. இதை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் செந்தில்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார். பழனி முருகன் கோவிலில் இந்துக்கள் அல்லாதவர் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்ற அறிவிப்பு பலகையை அதே இடத்தில் மீண்டும் வைக்க உத்தரவிட வேண்டும் என்று அவர் மனுவில்குறிப்பிட்டிருந்தார். இந்து சமய அறநிலை துறையின் சட்டத்தில்.  . இந்துஅல்லாத எவரும் கோவிலுக்குள் நுழையக்கூடாது என்று மனுதாரர்  கூறியிருந்தார். இந்து தெய்வத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள்.பிற மதத்தோா்  கோவிலுக்குள் நுழைய வேண்டிய அவசியம் இல்லை என்று சட்டம் சொல்கிறது.  இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீமதி,இந்து அல்லாதவர் கோவிலுக்குள் நுழைய தடை என்ற அறிவிப்பு பலகை ஏன் அகற்றப்பட்டது என கேள்வி எழுப்பி இந்த அல்லாதவர் கோவிலுக்கு நுழைய தடை என்ற பலகையை அதே இடத்தில் மீண்டும் வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டாா். வழக்கு விசாரணை இரண்டு வாரங்களுக்குதள்ளி வைக்கப்பட்டது.

. பழனி முருகன் கோவிலில் இந்துக்கள் அல்லாதவர் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்ற அறிவிப்பு பலகைமீண்டும் வைக்க வேண்டும்
 
Tags :

Share via