ஆன்லைன் சூதாட்டத்துக்கு 28 சதவீத ஜிஎஸ்டி அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமல்

by Editor / 02-08-2023 10:56:19pm
ஆன்லைன் சூதாட்டத்துக்கு 28 சதவீத ஜிஎஸ்டி அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமல்

ஆன்லைன் கேமிங், கேசினோ மற்றும் குதிரைப் பந்தயம் ஆகியவற்றுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தில்லியில் இன்று கூறினார். இதனை அடுத்து இவற்றின் மீதான 28 சதவீத ஜிஎஸ்டியை 6 மாதங்களுக்குப் பிறகு அமல்படுத்துவது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் ஆய்வு செய்யும். ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள் ஏற்கனவே 28 சதவீத ஜிஎஸ்டி குறித்து கவலை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய அரசிடம் ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள் முறையிட்டு வருகின்றனர்.

 

Tags :

Share via