முதல்வரின் ட்வீட் நீக்கம் - ராணுவம் புதிய டிவீட்

by Staff / 03-08-2023 03:13:14pm
முதல்வரின் ட்வீட் நீக்கம் - ராணுவம் புதிய டிவீட்

தமிழ்நாட்டில் இருந்து பெண் ஒருவர் மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றது தொடர்பாக ராணுவம் தரப்பில் பதிவிட்ட ட்வீட்டை மேற்கோள் காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்த நிலையில், திடீரென ராணுவம் அந்த பதிவை நீக்கியது. இந்நிலையில், ராணுவம் நீக்கியதன் பின்னணி என்ன? என திமுக எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பினார். இதனை தொடர்ந்து, இன்று இந்திய ராணுவத்தின் தலைமை பிரிவு தங்கள் டிவிட்டர் பக்கத்தில் ஏற்கனவே, இந்திய ராணுவத்தின் வடக்கு பகுதி கமாண்டர் பிரிவு பதிவு செய்து டெலிட் செய்த செய்தியை மீண்டும் பதிவு செய்துள்ளது.


 

 

Tags :

Share via