மாணவனை நிர்வாணமாக்கி மிரட்டிய கும்பல்

by Staff / 03-08-2023 04:03:27pm
மாணவனை நிர்வாணமாக்கி மிரட்டிய கும்பல்

சென்னையை சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர், தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் ஓரின சேர்க்கையாளர் டேட்டிங் செய்யும் செயலி ஒன்றை பயன்படுத்தி வந்துள்ளார். அந்த செயலியில் அறிமுகமான நபர் ஒருவர், கல்லூரி மாணவனிடம் நெருக்கமாகவும், ஆபாசமாகவும் பேசி வந்துள்ளார். பின்னர் இருவரும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சந்திக்க திட்டமிட்டுள்ளனர். அதன்படி, கல்லூரி மாணவர் அந்த இடத்திற்கு வந்ததும் அங்கு மறைந்திருந்த 3 பேர் கொண்ட கும்பல் மாணவனை நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டி பணத்தை பறித்துள்ளனர். மாணவன் அளித்த புகாரின் பேரில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via