எய்ம்ஸ் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து

by Staff / 07-08-2023 12:46:34pm
எய்ம்ஸ் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று காலை 11 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. நான்காவது மாடியில் உள்ள எண்டோஸ்கோபி பிரிவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அப்பகுதியில் பணியில் இருந்த ஊழியர்கள் அவசர மற்றும் எண்டோஸ்கோபி பிரிவில் உள்ள நோயாளிகளை வேறு பகுதிக்கு மாற்றி வருகின்றனர். திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் கடும் புகை காணப்பட்டது.

 

Tags :

Share via