மீண்டும் எம்.பி பதவி காங்கிரஸ் எம்.பிக்கள் இனிப்புகள் பரிமாறி கொண்டாடினர்

by Staff / 07-08-2023 01:33:07pm
மீண்டும் எம்.பி பதவி காங்கிரஸ் எம்.பிக்கள் இனிப்புகள் பரிமாறி கொண்டாடினர்

ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டுகள் தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்திவைத்த நிலையில் ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எம்.பி. பதவியை திரும்பப் பெற்றதை தொடர்ந்து ராகுல்காந்தி நாடாளுமன்றம் திரும்பினார். நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பிக்கள் இனிப்புகள் பரிமாறி கொண்டாடினர். தகுதி நீக்கம் திரும்ப பெற்ற நிலையில், நாளை தொடங்கவுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி பங்கேற்பார் என தகவல் வெளியானது. மேலும், ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் உள்ள சுயவிவர குறிப்பில் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் என குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via