கொரோனாவில் இறந்த 70,000 பாலிசிதாரர்களுக்கு  ரூ.1,598 கோடி காப்பீட்டுத் தொகை: 

by Editor / 24-07-2021 04:58:44pm
கொரோனாவில் இறந்த 70,000 பாலிசிதாரர்களுக்கு  ரூ.1,598 கோடி காப்பீட்டுத் தொகை: 

 

எச்.டி.எப்.சி. ஆயுள் இன்சூரன்ஸ், முதல் காலாண்டில் புதிய பிரீமியம் வருமானமாக ரூ.3767 கோடி வசூலித்துள்ளது. கடந்த ஆண்டை விட இது 44% அதிகமாகும். தனியார் துறை ஆயுள் இன்சூரன்ஸ் துறையில் புதிய பிரீமியம் வசூலில் இந்நிறுவனம் முதலிடம் வகிக்கிறது. கொரோனா நோயால் இறந்த இதன் 70 ஆயிரம் பாலிசிதாரர்களுக்கு ரூ.1598 கோடி காப்பீட்டு தொகை வழங்கப்பட்டது என்று நிர்வாக இயக்குனர் விபா படேல்கர் தெரிவித்தார்.


விபாபடேல்கர் கூறுகையில், “இந்த தொற்று உலகம் முழுவதும் பலரது வாழ்க்கையை பாதித்துள்ளது. பெரும்பாலான நிறுவனங்களுக்கு, இது சூழ்நிலைக்கு ஏற்ப தாங்கு திறனையும் மற்றும் செயல்திறனுக்கும் ஒருசோதனையாகும். ஒரு முன்னணி ஆயுள் காப்பீட்டு நிறுவனம் என்ற வகையில், இந்த கடினமான காலங்களில் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு உதவுவதற்கும் எங்கள் ஊழியர்கள் மற்றும் சார்ந்தவர்களுக்கும் ஆதரவளிப்பதற்கும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். உள்ளூர் ஊரடங்குகள் மற்றும் 2வது அலைகளின் போது இறப்புகள் அதிகரித்ததன் காரணமாக வணிகத்தில் இடையூறு ஏற்பட்டதன் அடிப்படையில், நாங்கள் 22% வளர்ச்சியையும் அடைந்துள்ளோம்.

வணிகத்தின் மதிப்பின் அடிப்படையில் நாங்கள் 40% வளர்ச்சியைக் கண்டோம் என்றார்.கடந்த காலாண்டில், இறப்பு உரிமை கோரல்களில் கடும் உயர்வைக் கண்டோம். அலை 2ல் உச்ச உரிமை கோரல்கள் முதல் அலைகளில் உச்ச உரிமை கோரல் தொகுதிகளின் 3- 4 மடங்குகள் இருந்தன. Q1 ல் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உரிமை கோரல்களை நாங்கள் ஈடேற்றியுள்ளோம்.

வழங்கப்பட்ட மொத்த மற்றும் நிகர உரிமை கோரல்கள் முறையே ரூ.1,598 கோடி மற்றும் ரூ. 956 கோடியாகும். எங்கள் தற்போதைய உரிமை கோரல் அனுபவத்தின் அடிப்படையில், நாங்கள் ரூ.700 கோடிகள் கூடுதல் ஒதுக்கீட்டினை தயாராக வைத்துள்ளோம். ஒவ்வொரு சரியான கோரிக்கையையும் ஈடேற்றுவதை எங்கள் இலக்காகக் கொண்டுள்ளோம்” என்றார்.

 

Tags :

Share via